திருப்பூர
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே 20 ஆண்டுகாலம் பழமையான ஒரு அரசரம் இருந்தது. அந்த பகுதியில் கால்வாய் விரிவாக்க பணிக்காக இந்த மரத்தை வெட்ட மாநகராட்சி முடிவு செய்தது. இது குறித்து தனியார் அமைப்பினருக்கு தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து தனியார் அமைப்பினர் பங்களிப்புடன் நேற்று அந்த அரசமரம் கிரேன் மூலம் வேருடன் பிடுங்கப்பட்டது. தொடர்ந்து அந்த அரசரம் அருகில் உள்ள ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மறுநடவு செய்யப்பட்டது. தனியார் அமைப்பினரின் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
-------