மேச்சேரி அருகே என்ஜினீயரிங் மாணவர் விபத்தில் பலி
என்ஜினீயரிங் மாணவர் விபத்தில் பலி;
மேச்சேரி:
மேச்சேரி அருகே உள்ள எம்.காளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 20), என்ஜினீயரிங் கல்லூரி மாணவர். சம்பவத்தன்று இரவு உறவினரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு மேச்சேரியில் உள்ள உடற்பயிற்சி நிலையத்துக்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
எம்.காளிப்பட்டி அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்டு உயிருக்கு போராடிய அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.