சிவகிரியில் கர்ப்பிணி தற்கொலை
சிவகிரியில் கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.;
சிவகிரி:
சிவகிரி செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி மனைவி காயத்ரி (வயது 19). இவருக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த அவர் வயிற்று வலி, நெஞ்சு வலி, கால் வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த காயத்ரி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தலைமுடிக்கு பூசப்படும் சாயத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயத்ரிக்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் தென்காசி உதவி கலெக்டர் ராமச்சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.