நெல்லையில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-04-20 21:55 GMT
நெல்லை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தொழிலாளர்களுக்கான விடுப்பு விதிகளை மாற்றக்கூடாது, சம்பளத்தை பறிக்கக்கூடாது, வார ஓய்வை பறிக்கக்கூடாது, பணிக்கு வரும் தொழிலாளர் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும், பணி வழங்காமல் விடுப்பு கழிப்பு ஆப்செண்ட் செய்யக்கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை வண்ணார்பேட்டை தாமிரபரணி பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. மாநில அமைப்பு செயலாளர் தர்மன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிற்சங்க பொருளாளர் ஜோதி, சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் எஸ்.பெருமாள், ஏ.ஐ.டி.யு.சி. பொது செயலாளர் உலகநாதன், எச்.எம்.எஸ்.மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியன், டி.டி.எஸ்.எப். பொதுச்செயலாளர் சந்தானம், சி.ஐ.டி.யு. காமராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வண்ணார்பேட்டை புறவழிச்சாலை பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. தஸ்தகீர் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் பெருமாள், சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ஜோதி, பாலகிருஷ்ணன் மற்றும் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்