அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-04-20 20:46 GMT
தாமரைக்குளம்:
அரியலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசை கண்டித்தும், வார ஓய்வூதியம், போக்குவரத்து கழக விடுப்பு விதிகளை மாற்றக்கூடாது, தொழிலாளர் துறை அறிவுரையை மீறக்கூடாது, பணிக்கு வந்த தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எல்.பி.எப். கிளை தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. சந்தானம் முன்னிலை வகித்தார். அம்பேத்கார் தொழிற்சங்கம் சட்டநாதன் நன்றி கூறினார். இதில் தொ.மு.ச. சட்டநாதன் உள்பட எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்