அரியலூர், தேளூர், செந்துறை துணை மின்நிலைய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

அரியலூர், தேளூர், செந்துறை துணை மின்நிலைய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2021-04-20 20:45 GMT
அரியலூர்:

மின்சாரம் நிறுத்தம்
அரியலூர், தேளூர், செந்துறை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை(வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் அரியலூ் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் ஒரு சில பகுதிகளான அரியலூர் நகர பகுதி மற்றும் கயர்லாபாத், ராஜீவ்நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளூர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரியில் ஒரு பகுதி, கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கல்லங்குறிச்சி, மணக்குடி, கடுகூர், கோப்பிலியன்குடிக்காடு, அயன்ஆத்தூர், ஆனந்தவாடி, சீனிவாசபுரம், பொய்யாதநல்லூர், கொளப்பாடி, ஓட்டக்கோவில், கோவிந்தபுரம், மங்களம், தாமரைக்குளம், குறுமஞ்சாவடி ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
தேளூர், செந்துறை பகுதிகளில்...
இதேபோல் தேளூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் ஒரு சில பகுதிகளான வி.கைகாட்டி, தேளூர், கா.அம்பாபூர், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூர் விளாங்குடி, நாகமங்கலம், ஒரத்தூர், அம்பவலர் கட்டளை, உடையவர்தீயனூர், விக்கிரமங்கலம், குணமங்கலம், கடம்பூர், ஓரியூர், ஆண்டிப்பட்டாக்காடு, சுண்டக்குடி, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாக்கியர்பாளையம், மைல்லாண்டகோட்டை  ஆகிய பகுதிகளிலும், செந்துறை துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகள் முழுவதும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே பணி முடிக்கப்பட்டால் உடனடியாக மின்சார வினியோகம் செய்யப்படும். இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் (இயக்குதலும், காத்தலும்) சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்