20 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,145 ஆக உயர்ந்துள்ளது. அதில் 4,903 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 49 பேர் இறந்துள்ளனர். 193 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.