ஓட்டல், பெட்டிக்கடையில் மது விற்ற 2 பேர் கைது
ஓட்டல், பெட்டிக்கடையில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நொய்யல்
நொய்யல் மரவாபாளையம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு பெட்டிக் கடையில் மது பாட்டில்களை பதுக்கி திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடை ஒன்றில் பதுக்கி வைத்து மது விற்ற நொய்யல் பகுதியை சேர்ந்த மகுடீஸ்வரன் (வயது 49) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல தளவாபாளையம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் மதுவிற்றதாக தளவாபாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் (40) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.