பெருந்துறையில், போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
பெருந்துறையில் குன்னத்தூர் ரோட்டில் உள்ள போக்குவரத்து கழக பணிமனை அருகே போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். தொழிலாளர்களுக்கு வாரம் தோறும் ஓய்வு முறையை அறிவிக்க வேண்டும். பணிக்கு வந்த தொழிலாளர்களுக்கு கட்டாயம் பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆகியவை உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.