அதிக பயணிகளை ஏற்றி வந்த தனியார் பஸ்சுக்கு அபராதம்

அதிக பயணிகளை ஏற்றி வந்த தனியார் பஸ்சுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;

Update: 2021-04-20 20:12 GMT
கரூர்
கொரோனா தற்போது தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில் பஸ்களில் அதிகளவில் பயணிகளை ஏற்றக் கூடாது முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அதனை மீறுபவர்கள் மீது அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர்.
அந்தவகையில் நேற்று காலை கரூர் காந்திகிராமம் பஸ் நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் நகராட்சி நகர் நல அலுவலர் யோகானந்த் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தனியார் பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அதிக அளவிலான பயணிகளை சமூக இடைவெளி இல்லாமல் ஏற்றி வந்ததற்காக ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். அவற்றை ஏற்க மறுத்த டிரைவரும், கண்டக்டரும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் எச்சரிக்கை செய்ததையடுத்து தனியார் பஸ் சென்று விட்டது.

மேலும் செய்திகள்