மின்சாரம் பாய்ந்து மயில் சாவு
காட்டுப்புத்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து மயில் செத்தது.
காட்டுப்புத்தூர், ஏப்.21-
காட்டுப்புத்தூர் அருகே எம். புத்தூர் வயல் பகுதியில் தேசிய பறவையான மயில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது, ஒரு மயில் பறந்து சென்றபோது, அந்த வழியாக சென்ற மின்கம்பியில் அதன் உடல் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து அந்த மயில் இறந்தது. இதையறிந்த காட்டுப்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகலா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த மயிலை கைப்பற்றினர். பின்னர் அந்த மயில் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு புதைக்கப்பட்டது.