73 மையங்களில் பிளஸ்-2 செய்முறை தேர்வு

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 2-வது கட்டமாக 73 மையங்களில் பிளஸ்-2 செய்முறை தேர்வு நடந்தது

Update: 2021-04-20 19:35 GMT
திண்டுக்கல்:

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு அடுத்த மாதம் (மே) நடைபெற இருந்தது. இதற்கிடையே கொரோனா பரவல் அதிகரித்ததால் பிளஸ்-2 தேர்வு தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது. 

அதேநேரம் செய்முறை தேர்வுகள் திட்டமிடப்படி கடந்த 16-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. மேலும் கொரோனா பரவல் காரணமாக செய்முறை தேர்வு 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதற்காக, திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 150 மையங்கள் அமைக்கப்பட்டன. 

இதில் முதல்கட்டமாக 77 மையங்களில் கடந்த 16-ந்தேதி செய்முறை தேர்வு நடைபெற்றது. 

இதைத்தொடர்ந்து நேற்று 2-வது கட்டமாக திண்டுக்கல், கொடைக்கானல், நிலக்கோட்டை, பழனி, தொப்பம்பட்டி, வத்தலக்குண்டு, சாணார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 73 மையங்களில் செய்முறை தேர்வு நடந்தது. 

இதில் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். முன்னதாக மாணவ-மாணவிகள் உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தபின்னரே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்