71 மதுபாட்டில்கள் பறிமுதல்

விருதுநகரில் 71 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-04-16 20:24 GMT
விருதுநகர், 
விருதுநகர் மேற்கு போலீசார் இந்நகர் பைபாஸ் ரோட்டில் ரோந்து சென்ற போது ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா கட்டய தேவன் பட்டியை சேர்ந்த பரமசிவம் (வயது 62) என்பவர் மதுபாட்டில்களுடன் நின்று கொண்டிருந்தார். அவரிடமிருந்து 21 மது பாட்டில்களையும், மதுவிற்ற  ரூ.930-யும் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 இதேபோன்று புல்லலக்கோட்டை ரோட்டில் திருமங்கலம் தாலுகா வீரப்பெருமாள் புரத்தை சேர்ந்த நாராயணன் (40) மது பாட்டில்களுடன் நின்று கொண்டிருந்த போது மேற்கு போலீசார் அவரிடம் இருந்து 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்ததோடு மது விற்ற ரூ.2,050-ஐ பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்