கொரோனா பரவல் அதிகரிப்பு:கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் மூடப்பட்டது
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் மூடப்பட்டது
மீன்சுருட்டி
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உலக பிரசித்தி பெற்ற கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நடைபெறும் அன்னாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. தற்போது கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதால் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் நேற்று முதல் அடுத்த மாதம் (மே) 15-ந் தேதி வரை மற்றும் மறு உத்தரவு வரும்வரை கோவிலுக்குள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று தொல்லியல் துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவில் முன்பு இரும்பு கதவுகள் கொண்டு மூடப்பட்டு அறிவிப்பு நோட்டீஸ் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கம்போல் சாமிக்கு நடைபெறும் ஆறு கால பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திடீர் அறிவிப்பால் நேற்றைய தினம் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.