பெண் மர்ம சாவு; போலீசார் விசாரணை

பெண் மர்ம சாவு; போலீசார் விசாரணை

Update: 2021-04-16 19:35 GMT
ஆதனக்கோட்டை:
ஆதனக்கோட்டை அருகே உள்ள வளவம்பட்டி கிராமம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி பானுமதி (வயது 55). மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. பானுமதியை காணவில்லை என்று அவரது மகன் தேவேந்திரன் ஆதனக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று கல்லுக்காரன்பட்டி அருகே உள்ள தைல மர காட்டில் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில், பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை செய்த போது அழுகிய நிலையில் கிடந்தது பானுமதி உடல் தான் என்பதை ெதரியவந்தது. இதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் பானுமதி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து தூக்கி தொங்க விட்டனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்