நெல்லையில் பலத்த மழை

நெல்லையில் பலத்த மழை பெய்தது.

Update: 2021-04-16 19:34 GMT
நெல்லை:
நெல்லையில் பலத்த மழை பெய்தது.

மழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. எனினும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அவ்வப்போது மாலையில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நெல்லையில் வழக்கம்போல் காலையில் இருந்து மதியம் வரையிலும் வெயில் வாட்டியது. பிற்பகலில் வானத்தில் மேகங்கள் திரண்டதால் வெயிலின் தாக்கம் குறைந்தது. தொடர்ந்து மாலை 4 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது.

ஊர்ந்து சென்ற வாகனங்கள்

நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

நெல்லை சந்திப்பு பகுதியில் சாலையில் தேங்கிய தண்ணீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை கொட்டியது. இதனால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியது.

மழை அளவு

நெல்லை மாவட்டத்தில் காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பாபநாசம்-10, சேர்வலாறு-3, கொடுமுடியாறு-7.

மேலும் செய்திகள்