தோகைமலையில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட பொதுமக்கள்
கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் போட்டு கொண்டனர்.
தோகைமலை
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் சுகாதாரத்துறை சார்பில் 45 வயதிக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தோகைமலையில் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் தோகைமலை, நாகனூர், பாதிரிப்பட்டி, பொருந்தலூர், கழுகூர், கூடலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளை சேர்ந்த 45 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஆர்வத்துடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டு கொள்கின்றனர். தற்போது வரை போடப்பட்டுள்ள தடுப்பு ஊசியால் எந்த பக்கவிளைவும் இல்லை. எனவே 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என வட்டார மருத்துவர் தியாகராஜன் தெரிவித்தார்.