டாஸ்மாக் பார் ஊழியரிடம் பணம் பறித்த 3 பேர் கைது
டாஸ்மாக் பார் ஊழியரிடம் பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
கரூர் வெங்கமேடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 54). இவர் செல்லாண்டி பாளையத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் சப்ளையராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், நேற்றுமுன்தினம் மேலப்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ் (23), கட்டளையை சேர்ந்த அருண்குமார் (24) மற்றும் தீபக் குமார் (20) ஆகிய 3 பேரும் பாருக்கு வந்து மது குடித்து உள்ளனர். இதையடுத்து அவர்களிடம் அதற்கான பணத்தை முருகேசன் கேட்டுள்ளார். அப்போது பணம் தர மறுத்ததுடன், கத்தியை காட்டி மிரட்டி முருகேசனிடம் இருந்த ரூ.400-ஐ அவர்கள் பறித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் வழக்குப்பதிந்து, 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.