உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கரும்பு அரவை தொடங்கியது. விவசாயிகள் ஆலை அரவைக்கு தேவையான கரும்பை வழங்கி ஒத்துழைப்பு தரவேண்டும் என்று ஆலை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கரும்பு அரவை தொடங்கியது. விவசாயிகள் ஆலை அரவைக்கு தேவையான கரும்பை வழங்கி ஒத்துழைப்பு தரவேண்டும் என்று ஆலை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Update: 2021-04-16 17:51 GMT
உடுமலை, 
உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கரும்பு அரவை  தொடங்கியது. விவசாயிகள் ஆலை அரவைக்கு தேவையான கரும்பை வழங்கி ஒத்துழைப்பு தரவேண்டும் என்று ஆலை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை
உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் உள்ளது அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை. இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாத காலத்தை கரும்பு அரவைப்பருவமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலை அரவைக்குத்தேவையான கரும்பு, இந்த ஆலை கரும்பு விவசாயிகளிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் பதிவு செய்து கொள்முதல் செய்துகொள்வதற்காக அரசால், எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், தாராபுரம், பழனி ஆகிய தாலுகாக்களில் உள்ள கரும்பு விவசாயிகளிடமிருந்து ஆலைப்பகுதி, குமரலிங்கம், கணியூர், நெய்க்காரப்பட்டி, பழனி ஆகிய கோட்ட கரும்பு அலுவலகங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் கரும்பு பதிவு செய்யப்பட்டு, ஆலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி2020-2021-ம் ஆண்டு கரும்பு அரவைப்பருவத்திற்கு 695 ஏக்கர் கன்னி கரும்பும், 1,005 ஏக்கர் கட்டை கரும்பும் என மொத்தம் 1,700 ஏக்கர் கரும்பு பதிவாகியுள்ளது. இதன் மூலம்ஆலை அரவைக்கு சுமார் 71 ஆயிரம் டன் கரும்பு கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அத்துடன் கரும்பு விவசாயிகளை அணுகி, அவர்கள் பயிரிட்டுள்ள, பதிவு செய்யப்படாத கரும்புகளையும் ஆலை அரவைக்கு கேட்டு பெற திட்டமிடப்பட்டுள்ளது என்றும், இதற்கு கரும்பு விவசாயிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று ஆலையின் நிர்வாகம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கரும்பு அரவை தொடக்கம்
இந்த நிலையில் 2020-2021-ம் ஆண்டு அரவை பருவத்திற்கு ஆலையை தயார்படுத்துவதற்காக ஆலையின் கொதிகலன்களில் இளஞ்சூடு ஏற்றும் விழா கடந்த மாதம் 24-ந்தேதி நடந்தது. அதுமுதல் கொதிகலன்களில் சூடேற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஆலையில் 2020-2021 ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கான கரும்பு அரவை தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. சிறப்பு பூஜையைத்தொடர்ந்து நடந்த கரும்பு அரவைத்தொடக்க விழாவிற்கு ஆலையின் மேலாண்மை இயக்குனர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் தலைமை தாங்கினார். விழாவில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்க பொதுச்செயலாளர் சி.சண்முகவேலு, துணைப்பொதுச்செயலாளர் டபிள்யு.என்.கே.ஈஸ்வரன், ஆலையின் நிர்வாகக்குழு தலைவர் காங்கேயம்பாளையம் சின்னப்பன் என்ற எஸ்.பழனிசாமி, துணைத்தலைவர் என்.முத்துராமலிங்கம் மற்றும் வெங்கடாசலம், துரைசாமி, கோசலாதேவி உதயக்குமார், மல்லிகாசாமிதுரை, பள்ளபாளையம் குப்புசாமி உள்ளிட்ட நிர்வாகக்குழு இயக்குனர்கள், ஆலையின் கரும்பு பெருக்கு அலுவலர் ஏ.சுப்புராஜ் மற்றும் தொழிலாளர்கள், ஊழியர்கள், களப்பணியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். கரும்பு அரவை தொடக்கவிழா மிக எளிமையாக நடந்தது.

மேலும் செய்திகள்