செஞ்சிக்கோட்டை நுழைவு வாயில் மூடல்
செஞ்சிக்கோட்டை நுழைவு வாயில் மூடப்பட்டது.
செஞ்சி,
கொரோனா 2-வது அலை வேகமாக பரவுகிறது. எனவே தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச்சின்னங்களை அடுத்த மாதம் (மே) 15-ந் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் செஞ்சிக் கோட்டையில் நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. மேலும் செஞ்சிக்கோட்டைக்கு செல்லும் நுழைவு வாயில் கேட் மூடப்பட்டது. இது தெரியாத பல சுற்றுலா பயணிகள் செஞ்சிக்கோட்டைக்கு வந்து, அதனை பார்வையிடாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.