கடலூர் முதுநகர் அருகே மதுபாட்டில்கள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

கடலூர் முதுநகர் அருகே மதுபாட்டில்கள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Update: 2021-04-16 17:05 GMT
கடலூர்முதுநகர்,

கடலூர் முதுநகர் அருகே குடிகாடு பகுதியில் டாஸ்மாக் மொத்த குடோன் இயங்கி வருகிறது. நேற்று மாலை குடோனில் இருந்து மதுபான பெட்டிகளை ஒரு லாரியில் ஏற்றி அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது டாஸ்மாக் கடை அருகே சென்ற போது, பின்னால் வந்த மற்றொரு லாரி எதிர்பாராதவிதமாக மதுபாட்டில்கள் ஏற்றி சென்ற லாரி மீது மோதியது. இதில் அந்த லாரி அங்கிருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  லாரியை ஓட்டி வந்த டிரைவர்  லேசான காயத்துடன் உயிர் தப்பினார். 

இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். கவிழ்ந்த லாரியில் இருந்து மதுபான பெட்டிகளை கடைக்கு மாற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் மதுபான பாட்டில்கள் பெரிய அளவில் சேதம் அடையவில்லை என கூறப்படுகிறது. ஆயினும் இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்