கச்சிராயப்பாளையம் பகுதியில் பொதுமக்கள் கூடும் இடங்களில் முட்செடிகளை வெட்டி போட்ட பேரூராட்சி ஊழியர்கள் கொரோனா தொற்று எதிரொலியால் நடவடிக்கை

கச்சிராயப்பாளையம் பகுதியில் பொதுமக்கள் கூடும் இடங்களில் முட்செடிகளை வெட்டி போட்ட பேரூராட்சி ஊழியர்கள் கொரோனா தொற்று எதிரொலியால் நடவடிக்கை

Update: 2021-04-16 15:36 GMT

கள்ளக்குறிச்சி

தற்போது நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  

இந்தநிலையில் கச்சிராயப்பாளையம் பகுதியில் பொதுமக்கள் சிலர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் அலட்சியமாக நடந்து வருகின்றனர்.. குறிப்பாக பஸ் நிலையங்கள், அரசமரம், டீக்கடை போன்ற பகுதிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் பொதுமக்கள் கூட்டமாக கூடி நின்றும், உட்கார்ந்தும் பேசி வருகின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் இருந்து வருகிறது.  இதுபற்றிய தகவல் அறிந்த வடக்கநந்தல் பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகம் தலைமையில் பணி மேற்பார்வையாளர் ராஜா மற்றும் துப்புரவு ஊழியர்கள் கச்சிராயப்பாளையம் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான டீக்கடை மற்றும் அரசமரத்தின் கீழ்பகுதி உள்ளிட்ட இடங்களில் முட்செடிகளை வெட்டிப்போட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கொரானா தொற்று தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

மேலும் செய்திகள்