ஆற்காடு அருகே முயல்வேட்டைக்கு சென்றபோது மின் வேலியில் சிக்கி தொழிலாளி பலியானார்.

ஆற்காடு அருகே முயல் வேட்டைக்கு சென்றபோது மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலியானார். மின்வேலி அமைத்த நில உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-04-16 15:30 GMT
ஆற்காடு

முயல் வேட்டைக்கு...

காஞ்சீபுரம் மாவட்டம் விஷார் கிராமத்தை சேர்ந்தவர் பாபு (வயது 40). இவர் ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள எம்.என்.பாளையத்தில் செங்கல் சூளையில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை பாபு, அவரது நண்பர்கள் திருமலை, ரமேஷ், சுரேஷ் ஆகிய 4 பேரும் விளாப்பாக்கம் பகுதியில் முயல் வேட்டைக்காக சென்றுள்ளனர்.

அப்போது அங்கு வேர்க்கடலை பயிரை பன்றி மற்றும் எலிகள் நாசப்படுத்தி வருவதால் மச்சேந்திரன் என்பவர் மின்வேலி அமைத்துள்ளார். இதனை கவனிக்காத பாபு மின்வேலியில் சிக்கி உள்ளார். 

மின்வேலியில் சிக்கி பலி

இதில் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த கிராம நிர்வாக அலுவலர் திருச்செந்தூர் வேலன் திமிரி போலீசில் புகார் செய்தார். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நில உரிமையாளர் மச்சேந்திரன் (52) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்