கோத்தகிரியில் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை
கோத்தகிரியில் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர்.;
கோத்தகிரி
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்படி கோத்தகிரி தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் தீபக், கிராம நிர்வாக அலுவலர்கள் பாலசுப்ரமணியம், மோகன் மற்றும் கிராம உதவியாளர்கள் நேற்று கோத்தகிரி மற்றும் அரவேனு பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளதா? என ஆய்வு செய்தனர்.
அப்போது சில வியாபாரிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
மொத்தத்தில் விதிமுறைகளை மீறிய வியாபாரிகளிடம் இருந்து ரூ.11 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.