பொதுமக்கள், அரசு ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

பொதுமக்கள், அரசு ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

Update: 2021-04-16 14:39 GMT
கோவை

பொதுமக்கள், அரசு ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வரு கிறது. இதையொட்டி மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

 இந்த நிலையில் கோவை புரூக் பீல்டு ரோட்டில் உள்ள சீத்தாலட்சுமி நகர்ப்புற சுகாதார நிலையம், ஆர்.எஸ்.புரம் தபால் அலுவலகம் அருகே உள்ள நகர்ப்புற சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. 

இதை கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன் நேற்று நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் உடன் இருந்தார். அதன்பிறகு கலெக்டர் நாகராஜன் கூறியதாவது

முகக்கவசம் கட்டாயம்

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் நடமாடும் வாகனங்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். 

முகக்கவசம் கட்டாயம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது ஆகியவற்றை முறையாக பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையை மாவட்ட கலெக்டர் நாகராஜன், மாநகராட்சி கமிஷனர் குமாரவேல்பாண்டியன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது நகர்நல அலுவலர் ராஜா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

அரசு ஊழியர்களுக்கு தடுப்பூசி

கோவை கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம் மற்றும் பழைய கட்டிடத் தில் 40-க்கும் மேற்பட்ட அரசுத்துறை அலுவலகங்கள் இயங்கி வருகின் றன. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்ற னர். இங்கு பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர். 


கொரோனா வேகமாக பரவி வருவதால் அரசு ஊழியர்களுக்கு கலெக்டர் அலுவலக புதிய கட்டிடத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. அங்கு அரசு ஊழியர்கள் வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

கண்காணிப்பு

இது குறித்து அரசுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது

சுகாதார துறை சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டது. பெரும்பாலானவர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. 

தடுப்பூசி போடப்பட்ட அனைவரும் 20 நிமிடங்கள் வரை நாற்காலியில் அமர வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து தாலுகா வாரியாக அரசு ஊழியர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்