திருச்செந்தூரில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்செந்தூரில்,கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2021-04-16 13:28 GMT
திருச்செந்தூர்:
 திருச்செந்தூர் போக்குவரத்து போலீஸ் சார்பில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா அருகில் நடந்தது. திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் தலைமை தாங்கி, 250 பேருக்கு முககவசம் மற்றும் கபசுரகுடிநீர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன், ஏட்டுக்கள் சண்முகம், தாமோதரன், வின்சியா, போலீசார் உடையார், முத்துகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்