கஞ்சா விற்ற பெண் கைது
திருமங்கலம் அருகே கஞ்சா விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
திருமங்கலம்,ஏப்
திருமங்கலம் அருகே உள்ள திரளி கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி (வயது 47). இவர் தனது மகனுடன் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் ரோந்து சென்ற திருமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமணன் தலைமையிலான போலீசார் அவர்கள் மீது சந்தேகம் அடைந்து சீதாலட்சுமி வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அதில் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சீதாலட்சுமியை கைது செய்து 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய அவரது மகனை தேடி வருகின்றனர்.