தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்து; 2 பேர் காயம்

தூத்துக்குடி அருகே, மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்.;

Update: 2021-04-16 12:33 GMT
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்பு தெருவைச் சேர்ந்த கெட்டிபொம்மு மகன் அரசமுத்து (வயது 40). இவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த முத்து பிள்ளை மகன் சங்கர் (32). இவர்கள் இருவரும் முத்தையாபுரத்தில் இருந்து, தெர்மல் நகர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் சென்ற மாட்டின் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் 2 பேரும் காயம் அடைந்தனர். இதில் சங்கர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அரசமுத்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். இந்த விபத்து குறித்து முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்