புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-04-16 12:22 GMT
புதுச்சேரி,

புதுச்சேரியில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் வரும் 19 ஆம் தேதி செய்முறை மற்றும் எழுத்து தேர்வுகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தால், 19 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டாளர் லாசர் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்