காட்பாடி வி.ஐ.டி.யில் ஆயிரம் படுக்கை வசதிகளுடன் தனி கொரோனா வார்டு
காட்பாடி வி.ஐ.டி.யில் ஆயிரம் படுக்கை வசதிகளுடன் தனி கொரோனா வார்டு
காட்பாடி
கொரோனா தொற்று 2-வது அலை உருவாகியுள்ளது. இதனால் வேலூர் மாவட்டத்தில் தினந்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமானால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க கல்லூரிகளிலும் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கொரோனா தனி வார்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்குள்ள இந்திரா காந்தி கட்டிடத்தில் இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் சங்கரன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன், நகர் நல அலுவலர் சித்திரசேனா, காட்பாடி தாசில்தார் பாலமுருகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.