பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் சென்னையில் 36 விமானங்கள் ரத்து

கொரோனா 2-வது அலை தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

Update: 2021-04-16 02:01 GMT
ஆலந்தூர், 

சென்னை மற்றும் புறநகா் பகுதியான செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் சென்னை விமான நிலையம் வரும் பயணிகள் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது. போதிய பயணிகள் இல்லாமல் கடந்த 2 நாட்களாக 18 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஆனால் நேற்று இது இரு மடங்காக அதிகரித்து உள்ளது. அதன்படி சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு செல்லும் 4 விமானங்கள், டெல்லி, மும்பை செல்லும் தலா 3 விமானங்கள், இந்தூா் செல்லும் 2 விமானங்கள், ஐதராபாத், நாக்பூா், புனே, சூரத், மங்களூரு, அந்தமான் ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய தலா ஒரு விமானங்கள் என மொத்தம் 18 விமானங்களும், அந்த நகரங்களில் இருந்து மீண்டும் சென்னைக்கு திரும்பி வரவேண்டிய 18 விமானங்களும் என 36 விமானங்கள் நேற்று ஒரே நாளில் பயணிகள் எண்ணிக்கை குறைவால் ரத்து ஆகி உள்ளன.

இவைகள் தவிர நேற்று சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 112 வருகை விமானங்கள், 109 புறப்பாடு விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால் அவைகளிலும் மிகவும் குறைந்த அளவு பயணிகளே பயணம் செய்தனர்.

மேலும் செய்திகள்