மேலும் 233 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்தார்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்தார்.
233 பேருக்கு கொரோனா
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் நாள் ஒன்றின் பாதிப்பு 1000-க்கும் குறைவாக இருந்தது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 7 ஆயிரத்து 987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உயர்ந்திருந்தது.
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் தற்போது திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 114 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
21 ஆயிரத்து 427ஆக உயர்வு
மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 427 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 623 ஆக உள்ளது. இதுபோல் கொரோனா பாதித்த 1,573 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பலன் இன்றி இதுவரை 231 பேர் பலியாகியுள்ளனர்.
தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா கட்டுப்பாடு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தகுதியுடையவர்கள் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மண்ணரையை சேர்ந்த 46 வயது ஆண் கொரோனாவுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார். திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள அவரது உடலை தகனம் செய்தனர்.