தீவட்டிப்பட்டி அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்திய கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது
தீவட்டிப்பட்டி அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்திய கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஓமலூர்:
தீவட்டிப்பட்டி அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்திய கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
10-ம் வகுப்பு மாணவி
சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே டேனிஸ்பேட்டை ஊராட்சி பெரியவடகம்பட்டி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் கடந்த 12-ந் தேதி இரவு 8 மணி அளவில் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்திலும் மற்றும் உறவினர் வீடுகளிலும் மாணவியை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இதையடுத்து மாணவி மாயமானது குறித்து பெற்றோர் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தனர்.
கொத்தனார் கைது
புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். போலீசார் விசாரணையில் டேனிஸ்பேட்டை வாளியாந்தோப்பு பகுதியை சேர்ந்தவரும், கொத்தனார் வேலை பார்ப்பவருமான லோகநாதன் (வயது 23) என்பவர் அந்த மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற லோகநாதன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அந்த மாணவியையும் மீட்டனர்.