ஊத்துமலை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
ஊத்துமலை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
ஆலங்குளம்:
ஊத்துமலை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
மின்சாரம் தாக்கியது
தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கருப்பினான்குளம் கிராமத்திற்கு அருகே அய்யனார் கோவில் உள்ளது. அந்த கோவிலில் நேர்த்திகடன் செலுத்துவதற்காக அந்த பகுதி மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதற்காக கோவில் பகுதியில் ஒலிபெருக்கி அமைப்பதற்காக தொழிலாளிகளான வாடியூரை சேர்ந்த அந்தோணி பிலிங்டன் (வயது 37), கொல்லம் கரிகோன் பகுதியை சேர்ந்த அப்துல்சலாம் (45) ஆகியோர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அருகில் உள்ள கிணற்றின் மூலம் மின்சாரம் இணைப்பதற்காக மரத்தின் மீது ஏறி மின்சார ஒயரை மேலே தூக்கி எறிந்துள்ளனர்.
அப்போது மின்கம்பத்தில் இருந்து செல்லும் கம்பியில் ஒயர் பட்டதால் 2 பேரும் மீதும் மின்சாரம் தாக்கியது.
தொழிலாளி பலி
இதில் தூக்கி வீசப்பட்ட அப்துல் சலாம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அந்தோணி பிலிங்டன் காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதுகுறித்து உடனடியாக ஊத்துமலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த அந்தோணி பிலிங்டனை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான அப்துல் சலாம் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.