திருச்சி மாவட்டத்தில் புதிதாக 241 பேருக்கு கொரோனா
திருச்சி மாவட்டத்தில் புதிதாக 241 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 241 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 981 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,628 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்தநிலையில் திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இருந்து நேற்று 62 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.