தென்னையில் வேர் ஊட்டம் பற்றி மாணவிகள் செயல்முறை விளக்கம்
தென்னையில் வேர் ஊட்டம் பற்றி மாணவிகள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
திருச்சி,
திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் 4-ம் ஆண்டு மாணவிகள் ஊரக தோட்டக்கலை பணி அனுபவத்தின் கீழ் அந்தநல்லூர் வட்டாரத்தில் தங்கி களப்பயிற்சி அனுபவம் பெற்று வருகின்றனர். பயிற்சியின் ஒரு பகுதியாக தென்னை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயியை சந்தித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் அறிமுகபடுத்தப்பட்ட தென்னை டானிக் பயன்படுத்தும் முறை பற்றி செயல்விளக்கம் அளித்தனர். மேலும் அதை பயன்படுத்துவதால் ஏற்படும் பச்சையம் அதிகரித்தல், குரும்பை கொட்டுதல் குறைப்பு, பருப்பின் எடை கூடுதல், 20 சதவீதம் மகசூல் அதிகரிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல் போன்ற பலன்கள் கிடைக்கும் என்று கூறினர். மேலும் இதை 6 மாதங்களுக்கு ஒரு முறை மரத்திற்கு அளிப்பதால் பயன்கள் கூடும் என்று தெரிவித்தனர்.