ஆற்றில் பிணமாக கிடந்த பெண் போலீஸ் விசாரணை

ஆற்றில் பிணமாக கிடந்த பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-04-15 19:03 GMT
சேரன்மாதேவி:

சேரன்மாதேவி தாமிரபரணி ஆற்றில் பக்வத்சல பெருமாள் கோவில் படித்துறை எதிரே சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் பிணம்  மிதந்தது. இதுகுறித்து ஆற்றில் குளிக்க வந்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், சேரன்மாதேவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி தலைமையிலான போலீசார், அங்கு சென்றனர். 

அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்?, எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்