விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கறம்பக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-04-15 18:56 GMT
கறம்பக்குடி
 அரக்கோணத்தில் 2 இளைஞர்களை படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி வழங்க வலியுறுத்தியும் கறம்பக்குடி ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கறம்பக்குடி சீனிகடைமுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வரெத்தினம் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணைசெயலாளர் சந்திரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்