அன்னவாசலில் இரு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலி

அன்னவாசலில் இரு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலியானார்கள்.;

Update:2021-04-16 00:22 IST
அன்னவாசல்
அன்னவாசல் அருகே உள்ள ஆயிப்பட்டியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் விக்னேஸ்வரன் (வயது 21). இவர் ஒரு மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை-அன்னவாசல் சாலையில் பெருஞ்சுனை என்னும் இடத்தில் சென்றபோது எதிரே வந்த கார் விக்னேஸ்வரன் ஓட்டிசென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோன்று புதுக்கோட்டை-அன்னவாசல் சாலையில் கட்டியாவயல் நான்கு வழிச்சாலை அருகே இரண்டு டிப்பர் லாரிகள் மோதி கொண்ட விபத்தில் அந்த இடத்தில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த அய்யக்கோன்பட்டியை சேர்ந்த சின்னையா (55) என்பவர் படுகாயம் அடைந்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்