தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அதிகரித்து உள்ளது.இந்த நிலையில்நேற்று புதிதாக 83 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 469 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 25 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதனால் கொரோனா பாதிப்பு காரணமாக மாவட்டத்தில் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை தற்போது 527 ஆக உயர்ந்துள்ளது.