நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளியில் உள்ள அரசு தொடக்க பள்ளியின் பின்புறம், சிலர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அதியமான்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனர். அப்போது, நல்லம்பள்ளி காந்திநகர் பகுதியை சேர்ந்த அபிஷேக் (வயது 19) என்பவர் மஞ்சப்பையில் மறைத்து வைத்து கஞ்சா பொட்டலங்கள் விற்றது தெரிய வந்தது. பின்னர் அவரிடமிருந்த 150 கிராம் கஞ்சா பொட்டலங்களை அதியமான்கோட்டை போலீசார் பறிமுதல் செய்து, அபிஷேக்கை கைது செய்தனர்.