கொல்லிமலையில் 15 அடி பள்ளத்தில் லாரி பாய்ந்தது; டிரைவர் பலி
கொல்லிமலையில் 15 அடி பள்ளத்தில் லாரி பாய்ந்தது; டிரைவர் பலி
சேந்தமங்கலம்:
கொல்லிமலையில் 15 அடி பள்ளத்தில் லாரி பாய்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் பலியானார்.
15 அடி பள்ளத்தில்
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம் வளப்பூர் நாடு ஊராட்சி அசக்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சபேசன் (வயது 25). இவர் அந்த பகுதியில் நீர்வீழ்ச்சியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் செல்லிபட்டிக்கு கட்டுமான பொருட்களை கொண்டு செல்லும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சபேசன் கொல்லிமலையில் இருந்து ஒரு டிப்பர் லாரியை ஓட்டி வந்தார். அந்த லாரி 70-வது கொண்டை ஊசி வளைவை கடந்து பின்பு மலை அடிவாரத்திற்கு வந்தது. பின்னர் அடிவாரத்தில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடி அருகே வந்தபோது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 15 அடி பள்ளத்தில் தடுப்பு சுவரை உடைத்து கொண்டு பாய்ந்து விபத்துக்குள்ளானது.
விசாரணை
இதில் சபேசன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திேலயே பரிதாபமாக இறந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதிைய சேர்ந்த பொதுமக்கள் சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார், சபேசனின் உடலை கைப்பற்றி சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான சபேசனுக்கு ஆனந்தி (20) என்ற மனைவியும், நிகிதா (3) என்ற மகளும், பிரதீவ் (2) என்ற மகனும் உள்ளனர். லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி பலியான சம்பவம் அசக்காட்டுப்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
======