தொழிலாளி மாயம்
தொழிலாளி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்
கரூர் சின்ன குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணியம்மாள். இவரது மகன் செந்தில்குமார் (வயது 44). கூலி தொழிலாளியான இவர், கடந்த 8-ந்தேதி மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வெகுநேரம் ஆகியும் வரவில்லை. இதையடுத்து செந்தில்குமாரின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து, மாயமான செந்தில்குமாரை தேடி வருகிறார்.