சத்திரப்பட்டி அருகே கூட்டுறவு சங்கம் முன் விவசாயிகள் போராட்டம்

சத்திரப்பட்டி அருகே கூட்டுறவு சங்கம் முன் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Update: 2021-04-15 17:43 GMT
சத்திரப்பட்டி :
சத்திரப்பட்டி அருகே உள்ள பெரியகோட்டையில் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயிர்க் கடன், நகைக்கடன் உள்ளிட்டவற்றை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் விவசாய பயிர்க்கடனை தள்ளுபடி செய்து  தமிழக அரசு உத்தரவிட்டது. 
இதைத்தொடர்ந்து நேற்று பெரியகோட்டையில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி ரசீதை காண்பித்து அடகு வைத்த நகைகளை திரும்ப தருமாறு கேட்டனர். 
ஆனால் விவசாயிகளுக்கு நகைகள் திரும்ப வழங்கப்பட வில்லை.  இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சங்க அலுவலகத்தில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த அம்பிளிக்கை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார், கூட்டுறவு சங்க அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


மேலும் செய்திகள்