திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு

போடி நகர் போலீஸ் நிலையத்தில் திண்டுக்கல் போலீஸ் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு செய்தார்.

Update: 2021-04-15 17:28 GMT
போடி: 

போடி நகர் போலீஸ் நிலையத்தில் திண்டுக்கல் போலீஸ் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி நேற்று மாலை ஆய்வு செய்தார். 

அப்போது அவர், போலீசார் அனைவரும் மிகவும் பாதுகாப்போடு கை உறை, முக கவசம் மற்றும் சானிடைசர் ஆகியவைகளை  கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். 

கொரோனா தொற்றிலிருந்து தன்னையும், தன் குடும்பத்தினரையும் பொதுமக்களையும் போலீசார் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். 

பின்னர் போலீசாருக்கு சானிடைசர், முக கவசம் மற்றும் கை உறை ஆகியவற்றை அவர் வழங்கினார். 

ஆய்வின்போது போடி போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்