வட்டி கடைக்காரர் உள்பட 2 பேர் பலி

தனித்தனி விபத்தில் வட்டி கடைக்காரர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

Update: 2021-04-15 17:06 GMT
செஞ்சி, 

விக்கிரவாண்டி அருகே உள்ள போரூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியன்(வயது 59). இவரது மனைவி குப்பு(வயது 54). இவர்கள் இருவரும் மொபட்டில் பனமலைப்பேட்டைக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்கிவிட்டு, போரூருக்கு புறப்பட்டனர். டி.கொசப்பாளையம் அருகே சென்றபோது எதிரே வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் தவறி கீழே விழுந்த குப்பு மீது சக்கரம் ஏறி, இறங்கியது. இதில் குப்பு சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வட்டி கடைக்காரர் சாவு 

வானூர் அருகே உள்ள உப்புவேலூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்லால் மகன் மாதவ் சிங்(35). இவர் செஞ்சி அருகே உள்ள வல்லம் கிராமத்தில் வட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இவர் நேற்று மதியம் தனது மோட்டார் சைக்கிளில் செஞ்சியில் இருந்து வல்லத்துக்கு புறப்பட்டார். நங்கிலிகொண்டான் அருகே சென்றபோது எதிரே வந்த அரசு பஸ், எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மாதவ் சிங் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அவரது மனைவி பிரேமாதேவி கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்