மின்னல் தாக்கி, ஆடு மேய்த்தவர் பலி
மின்னல் தாக்கி, ஆடு மேய்த்தவர் பலியானார்;
பரமக்குடி,
பரமக்குடி அருகே உள்ள மருந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தினகராஜன் (வயது40). இவர் நேற்று வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் தினகராஜன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். இதுகுறித்த புகாரின்பேரில் பரமக்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.