மதுபோதையில் கணவர் தகராறு செய்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

மதுபோதையில் கணவர் தகராறு செய்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-15 16:57 GMT

வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள கருதிகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் தீனா (வயது 27). ஆம்னி வேன் டிரைவர். இவர், அதே பகுதியை சேர்ந்த உறவினரான கீர்த்தனா (20) என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் காவியா என்ற பெண் குழந்தை உள்ளது. தீனாவுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வரும் அவர், கீர்த்தனாவுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் மனைவியிடம் தகராறு செய்துவிட்டு தீனா வெளியே சென்றுவிட்டார். 
இதில் மனம் உடைந்த கீர்த்தனா, தனது தாயார் ரேவதி வீட்டுக்்கு சென்று துப்பட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து தகவலறிந்ததும் கூம்பூர் போலீசார் விரைந்து வந்து கீர்த்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கீர்த்தனாவுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் பழனி சப்-கலெக்டர் ஆனந்தியிடம் விசாரணைக்காக பரிந்துரைக்கப்பட்டது. 
அதன் பேரில் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்