பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்த முதியவர்

கோவில்பட்டியில் பூட்டிய வீட்டில் முதியவர் பிணமாக கிடந்தார்.

Update: 2021-04-15 16:56 GMT
கோவில்பட்டி, ஏப்:
கோவில்பட்டி நடராஜபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் முப்பிடாதி (வயது 66). இவர் கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோட்டில் உள்ள தனியார் கண் ஆஸ்பத்திரியில் தோட்ட வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து பக்கத்து வீட்டுக்காரர்கள் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே சென்றனர். அங்கு முப்பிடாதி பிணமாக கிடந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வயது முதிர்வு காரணமாக முப்புடாதி இறந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்