திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம்;

Update: 2021-04-15 16:52 GMT
திருப்பூர்
கொரோனா பரவல் புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் வீதிகளில் செல்பவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. இதன்தொடர்ச்சியாக திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் ஊழியர்கள், பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்து வர வேண்டும். இல்லாவிட்டால் அபராத நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை நோட்டீஸ் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
மேலும் முககவசம் அணியாமல் வருபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தின் முன்புறம், பின்புறம் உள்ள இரு நுழைவுவாசல்களில் அமர்ந்து முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து வருகிறார்கள். நேற்று காலை அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் என முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரசீது வழங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்